சிஎஸ்கே ரசிகர்கள் இந்த பண்டிகையை கொண்டாடுங்க.. ஃபார்ம்க்கு திரும்பிய அனுபவ வீரர்.. இனி கலக்கல் தான்

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இதற்கு காரணம் இது தான் தோனியின் கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புச் சாம்பியனாக சிஎஸ்கே அணி களமிறங்கும் நிலையில் இம்முறையும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

சிஎஸ்கே அணி ரசிகர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் ஒரே ஒரு வீர நிலை குறித்து மட்டும் ரசிகர்கள் ஏமாற்றமாக இருந்தார்கள். அது வேறு யாருமில்லை. நமது ரஹானே தான் சர்வதேச கிரிக்கெட்டின் மோசமான பார்ம் காரணமாக அதிரடியாக இந்திய ஆணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு வந்து புத்துயிர் பெற்றார். அதிரடியாக விளையாடி அனைவரையும் மெர்சல் ஆக்கிய ரஹானேவிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் தற்போது அவர் தன்னுடைய இடத்தை மீண்டும் இழந்து விட்டார். அதன் பிறகு ரஞ்சி கோப்பையில் ரஹானே விளையாடி கடுமையாக தடுமாறி வருகிறார்.

இதுவரை மூன்று ரஞ்சி போட்டியில் விளையாடி வெறும் 33 ரன்கள் மட்டும் தான் அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான தன்னுடைய நான்காவது லீக் ஆட்டத்தில் ரஹானே களமிறங்கினார். முதல் இன்னிங்சில் ஒரு ரன் எடுத்து ரஹானே ஆட்டமிழந்த நிலையில் ரசிகர்கள் கடுப்பாகினர். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 97 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த போது அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் 5 விக்கெட் என்ற பரிதாபமான நிலைக்கு சென்றது.

இதை அடுத்து ஆறாவது விக்கெட்டுக்கு ரஹானேவும் சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாக்கூரும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 60 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஆட்டம் டிராவில் முடிவுக்கு வந்தது. இந்த இன்னிங்ஸில் ரஹானே பொறுப்பாக விளையாடி தன்னுடைய பழைய பார்மை மீட்டார். 124 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 56 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் மும்பை அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

41 முறை சாம்பியன் ஆன மும்பை அணி கடந்து சீசனில் லீக் சுற்றிலே வெளியேறிய நிலையில் தற்போது நாக் அவுட் சுற்றுக்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் ரஹானே தற்போது மீண்டும் பார்ம்க்கு திரும்பி இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது வெறும் தொடக்கமாக தான் இருக்கும். அடுத்தடுத்த போட்டிகளில் ரஹானே தன்னுடைய பழைய பார்மை மீட்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். ரஹானே தன்னுடைய பழைய பார்மை மீட்டால் அது சிஎஸ்கே அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *