பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணையவுள்ள நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் முடிவுகளின்படி இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதோடு ஏனைய கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.
சுயேட்சை வேட்பாளர்கள்
இந்நிலையில் மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவையாக உள்ளது. தனிப்பட்ட கட்சி அளவில், இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ள தோடு நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் உள்ளன.
இது ஆட்சி அமைக்க போதுமானது. ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு 128 இடங்கள் உள்ளதோடு இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவிற்காக சுயேட்சை வேட்பாளர்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் உறுதியற்ற நிலையில் பாகிஸ்தானை காப்பாற்ற கொள்கையளவிலும் நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கான அரசியல் ரீதியிலான ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.