அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு சூலை 14ஆம் திகதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. பின்னர் அவர் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தார்.
ஆனால், அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.