படம் முடியர வரைக்கும் கல்யாணம் பண்ணக்கூடாது!.. நயனுக்கே கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்…
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அதன்பின் சில வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி படத்திலும் அவருக்கு துக்கடா வேடம்தான். அதோடு, அவரின் உடல் தோற்றமும் குண்டாகவும் இருந்தது. எனவே, கதாநாயகி வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
அதன்பின் உடல் எடையை குறைத்து சிக்கென மாறினார். அப்படி அவரின் நடிப்பில் வெளியான பில்லா, வில்லு, ராஜா ராணி போன்ற திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட நயன்தாரா விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து லேடி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
பல வருடங்களாக தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். ரஜினியுடனே சில படங்களில் நடித்துவிட்டார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் தாயாக மாறினார். இப்போது சினிமாவில் நடிப்பது, படங்களை தயாரிப்பது, புதுப்புது வியாபாரங்கள் செய்வது என கலக்கி வருகிறார். இப்போது எந்த படத்தில் நடித்தாலும் ‘நான் புரமோஷனுக்கு வரமாட்டேன்’ என்கிற நிபந்தனையோடுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போடுகிறார்.
ஆனால், ஆனால், இதே நயன்தாராவை இந்த படம் முடியும் வரை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என ஒரு தயாரிப்பாளர் கண்டிஷன் போட்டார். நயன்தாராவும் அதை ஒப்புக்கொண்டார். அதுதான். ஆர்யா நடிப்பில் ஹிட் அடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது பிரபுதேவாவை நயன் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தனர்.
இதை தெரிந்து கொண்டுதான் அந்த பட தயாரிப்பாளர் நயனுக்கு அப்படி ஒரு கண்டிஷனை போட்டார். பிரபுதேவாவுக்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கும் நயன்தாரா மாறினார். ஆனால், சில காரணங்களால் அவர்களின் திருமணம் நடைபெறவில்லை. அதோடு, பிரபுதேவாவுடனான காதலும் பிரேக் அப்பும் ஆனது குறிப்பிடத்தக்கது.