அடிவயிற்று தொப்பை கரையவே மாட்டேங்குதா? இத மட்டும் செய்ங்க… சரசரனு குறைஞ்சிடும்…
தொப்பை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சிலர் ஒல்லியாகத் தான் இருப்பார்கள். ஆனால் தொப்பை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். தொப்பை உடல் அழகை கெடுப்பது மட்டுமில்லாமல் கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட ஆபத்துகளையும் ஏற்படுத்தும். அதனால் தொப்பை உள்ளவர்களே! எப்படியாவது அதை குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு இந்த பதிவு உங்களுக்கு உதவி செய்யும்.
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து உணவுகள் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவி செய்யும். குறிப்பாக கரையும் நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகள் தொப்பை மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வேகமாகக் கரைக்கும்.
வேகமாக தொப்பையைக் குறைக்க நினைத்தால், ஆப்பிள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ப்ரக்கோலி, ஓட்ஸ், பீன்ஸ் வகைகள் உள்ளிட்ட கரையும் நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உங்களுடைய தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புரதம் அதிகமுள்ள உணவுகள்
புரதங்கள் அதிகமுள்ள உணவுகள் உங்களுடைய தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவி செய்யும். குறிப்பாக, புரதங்களில் ஒருவகையான பெப்டைன் அதிகமுள்ள உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது தொப்பையைக் குறைக்க உதவி செய்யும்.
மீன், சிக்கன், முட்டை, கொண்டைக்கடலை, நிலக்கடலை, சீஸ், பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுகளில் இந்த பெப்டைன் அதிக அளவில் காணப்படுகிறது.
இவை அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைத்து தசைகளை இறுக்கமாக்க உதவி செய்கிறது.
போதிய அளவு தூக்கம்
தொப்பையைக் குறைப்பதற்கும் தூக்க்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். நிறைய சம்பந்தம் இருக்கிறது. நல்ல தூக்கம் தான் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யும்.
இதனால் மன அழுத்த ஹார்மோன்களும் டோஃபமைன் உள்ளிட்ட ஹார்மோன்களும் குறைவாக சுரக்கும். இது அதிக கலோரி சாப்பிடுவது, நடு ராத்திரியில் சாப்பிடுவது ஆகியவற்றைக் குறைத்து தொப்பையைக் குறைக்க உதவி செய்யும். குறிப்பாக காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் இரவில் நல்ல தூக்கம் அவசியம்.
டிரான்ஸ் .ஃபேட்
டிரான்ஸ் ஃபேட் அதிகமுள்ள உணவுகள் தான் பெரும்பாலும் தொப்பைக்குக் காரணமாக இருக்கிறது. தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் தவிர்க்க வேண்டியது இந்த டிரான்ஸ் ஃபேட் உணவுகள் தான்.
வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் சிப்ஸ்கள், பீட்சா, பர்கர் போன்றவை மற்றும் பேக்கரி உணவுகள் அனைத்திலும் டிரான்ஸ் ஃபேட் மிக மிக அதிகம். அவற்றை மனதால் கூட யோசிக்காதீர்கள்
மன அழுத்தம்
மன அழுத்தம் உண்டாவதற்கும் தொப்பைக்கும் நிறைய தொடர்பு உண்டு. மன அழுத்தம் ஏற்படும்போது உற்பத்தியாகிற கார்டிசோல் ஹார்மோன் அதிகப்படியாக பசியைத் தூண்டி கலோரிகளை கணக்கில்லாமல் சாப்பிட வைத்துவிடும். இது நாள்பட்ட நிலையில் தொடரும்போது தொப்பை வரும்.
இதைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் வேண்டுமென்றால் அதற்கு கட்டாயம் மன அழுத்தத்தைக் குறைத்தே ஆக வேண்டும். அதற்கு மிகச்சிறந்த வழி யோகாவும் தியானமும் தூக்கமும் தான்.