Hanuman movie: திரையரங்குகளில் வசூல் சாதனை.. ஹனுமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்ப தெரியுமா?

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த பொங்கலை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஹனுமன் படம். இந்த படம் முதலில் தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாகவே ரிலீசாக திட்டமிடப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் சர்வதேச மொழிகளில் வெளியாகி பான் வேர்ல்ட் படமாக ஹனுமன் படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமில்லாமல் ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இந்த படம் பொங்கல் ரிலீசாக வெளியானது.

படத்திற்கு அதிகமான புரமோஷன்கள் செய்யப்படாத நிலையிலும் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்திருந்த நிலையில் பிரஷாந்த் வர்மா ஹனுமன் படத்தை இயக்கியுள்ளார். படம் கடந்த 25 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டி திரையரங்குகளில் வசூலித்துள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் ஓடிடி குறித்து தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் படத்துடன் தமிழில் வெளியான கேப்டன் மில்லர், அயலான் படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தாமதமாகி வருகிறது.

ஹனுமன் படம்: நடிகர்கள் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் சிறப்புப் படமாக வெளியானது ஹனுமன். இயக்குனர் பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே அவரது சிறப்பான திரைக்கதை ரசிகர்களை மிரட்டியுள்ளது. படத்தில் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, கிஷோர் குமார், கெட்அப் சீனு, சத்யா உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவான நிலையில், தற்போது படத்தின் வசூல் முன்னூறு கோடி ரூபாய்களை தாண்டி உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

பான் வேர்ல்ட் படம்: சிறிய படமாகவே தன்னுடைய பயணத்தை ஹனுமன் படம் துவங்கியது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக திட்டமிடப்பட்ட இந்த படம், சர்வதேச மொழிகளில் பான் வேர்ல்ட் திரைப்படமாக வெளியிடப்பட்டது. படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி ஆகியுள்ள பிரசாந்த் வர்மாவிற்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ள ஹனுமன் படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.

ஹனுமன் ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில்இந்தப்படம் வரும் மார்ச் மாதம் எட்டாம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ள நிலையில் ஓடிடி உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு கைமாறியுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதும் ஹனுமன் படம் ஆந்திராவில் சில திரையரங்குகளில் படம் ஓடி வருகிறது. தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிரஷாந்த் வர்மா சினிமாட்டிக் யூனிவர்ஸ்: பிரைம் ஷோ என்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியான இந்தப் படம் பிரஷாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்சில் முதல் படமாக வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த யூனிவர்சில் அதீரா என்ற சூப்பர் ஹீரோ படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து வரும் 2025ம் ஆண்டில் ஹனுமன் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் தேஜா சஜ்ஜா, வில்லன் வினய் ராய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *