ஜடேஜா ரிட்டர்ன்ஸ்.. அக்சர் படேல் vs குல்தீப் யாதவ்.. யாருக்கு இடம்? மாட்டிக் கொண்ட ரோகித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என்பதால், அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ரவீந்திர ஜடேஜா முழு ஃபிட்னஸை எட்டியுள்ளதால், அவரது இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் ரவீந்திர ஜடேஜா இந்திய அணி வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ஜடேஜா கம்பேக் கொடுத்துள்ளதால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் யாருக்கு இடமளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள்.

அதேபோல் ராஜ்கோட் மைதானத்தின் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இல்லாமல், விசாகப்பட்டினம் பிட்சை போலவே இருக்கும். 4 ஸ்பின்னர்களோடு களமிறங்குவது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் ஒருவரை மட்டுமே கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி வீரர்களின் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அடிக்கவிடாமல் செய்வதில் குல்தீப் யாதவ் முக்கிய ஸ்பின்னராக மாறியுள்ளார். ஏனென்றால் குல்தீப் யாதவ் பவுலிங்கில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் மற்றும் லைன், லெந்தில் இருக்கும் மாறுபாடு இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல் அக்சர் படேலை பொறுத்தவரை 2023ல் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். ஸ்கொயர் டர்னர் பிட்சாக இருக்கும் சூழலில், அக்சர் படேல் விளையாட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ராஜ்கோட் பிட்சில் விளையாடிய அனுபவம் குல்தீப் யாதவிற்கு இருப்பதால், கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவு யார் பக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *