முன்னாடியே ஐடி ஊழியர்களுக்கு ‘இத’ செஞ்சிருக்கலாம்.. வருந்தும் இன்போசிஸ் நாராயண மூர்த்தி..!

பொதுவாக ஒரு நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த பிறகு அதன் நிறுவனர்களும், முதலாளிகளும் மட்டுமே பாராட்டப்படுகின்றனர். ஆனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரம், காலம் பார்க்காமல் கொடுத்த உழைப்பு தான் நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

அப்படி ஆரம்ப காலத்தில் இன்போசிஸின் வளர்ச்சிக்கு உழைத்து கொட்டிய ஊழியர்களுக்கு நான் பெரிதாக எதுவுமே செய்யவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் அதன் நிறுவனர் நாராயண மூர்த்தி.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி: இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸை நிறுவியவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி.ஐடி துறையில் சர்வதேச அளவில் இந்தியா அடைந்த பாய்ச்சலுக்கு இன்போசிஸ் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் அவ்வப்போது முன் வைக்கும் கருத்துகள் செய்திகளாகின்றன.

”ஊழியர்களுக்கு தக்க பரிசளிக்கவில்லை”: நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தியின் வாழ்க்கையை விவரிக்கும் ”An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy” என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட நாராயண மூர்த்தி தனது இளமை காலத்தை பற்றியும் இன்போசிஸ் நிறுவனத்தின் தொடக்கத்தை பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது , இன்போசிஸ் தொடங்கிய காலத்தில் ஏராளமான ஊழியர்கள் இரவு பகல் பாராமல் தங்கள் உழைப்பை தந்தனர், ஆனால் என்னுடைய துணை நிறுவனர்களுக்கு தந்ததை போல நிறுவன பங்குகள் உள்ளிட்ட எந்த பரிசையும் நான் அவர்களுக்கு தராமல் விட்டுவிட்டேன் என கூறினார்.

தான் இன்போசிஸ் நிறுவனத்திற்காக எவ்வளவு உழைத்தேனோ அதே அளவுக்கு அவர்களும் உழைத்தார்கள், நான் முன்பே இது குறித்து சிந்தித்து அவர்களுக்கு உரிய பரிசினை தந்திருக்க வேண்டும், ஆனால் அதை செய்யாமல் விட்டுவிட்டேன் என வருத்தப்படுகிறேன் என்றார்.

பேசுபொருளாகும் நாராயண மூர்த்தியின் கருத்துகள்: முன்னதாக இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டும் என நாராயண மூர்த்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அண்மையில் நாளிதழுக்கு பேட்டி அளித்த நாராயண மூர்த்தி, தனது கழிவறையை தானே சுத்தம் செய்யும் பழக்கம் கொண்டவன் என தெரிவித்திருந்தார். நமது சமூகத்தில், தங்கள் கழிப்பறையைச் சொந்தமாகச் சுத்தம் செய்பவர்களைக் கேவலமாகப் பார்க்கும் போக்கு இருக்கிறது.

இதன் காரணமாகவே சமூகத்தில் நமக்குக் கீழ் யாரும் இல்லை என்று நான் எனது குழந்தைகளிடம் சொல்வேன்.. என் பேரக்குழந்தைகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

அவர்கள் சுற்றி நடப்பதைக் கவனிக்கிறார்கள்.. நிறையக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நான் அவர்களிடம் எப்போதும் சொல்வது ஒன்றுதான்.. யாரும் நம்மை விடக் குறைவானவர்கள் இல்லை என்பதை கற்றுத்தருவதாக கூறி இருந்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *