லோகேஷ் கனகராஜ் மீது செம காண்டு போல!.. மேடையில் சிவகார்த்திகேயன் இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் குழந்தைகள் பார்க்க தகுதியில்லாத படம் என விமர்சனங்கள் குவிந்தன.

மேலும், அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் எல்லாம் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகளும், சுத்தியலை எடுத்து மண்டையை பிளக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும், கஞ்சா, போதைப் பொருள், புகையிலை, சரக்கு என படம் முழுக்க நிறைந்திருக்கும் நிலையில், ஆபாச வசனங்கள், லிப் லாக் முத்தக் காட்சிகள் என விரசமும் கொட்டிக் கிடக்கின்றன என்கிற குற்றச்சாட்டை பல விமர்சகர்களும் முன் வைத்து வந்தனர்.

தற்போது அதையே நேற்று நடந்த அயலான் ஆடியோ லான்ச் விழாவில் சிவகார்த்திகேயனும் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எல்லாவற்றையும் குறீயிடு வைத்து பேசுவது போலவே பேசியுள்ளார்.

சமீப காலமாக வெளியாகும் படங்களில் எல்லாம் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை அதிகரித்து கிடக்கும் காட்சிகள் உள்ளது என்றும் தங்கள் அயலான் படம் தரமான படம் நம்பி வாங்க, சந்தோஷமா போங்க என்கிற ரேஞ்சுக்கு படத்தில் பீடி சிகரெட் புகை கிடையாது, சரக்கு அடிக்கும் சீன் கிடையாது, வன்முறை கிடையாது, குழந்தைகளுடன் ஜாலியாக ஏலியன் படத்தை சந்தோஷமாக பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தலைவர் 171வது படத்தில் தன்னை சேர்க்காத நிலையில் தான் சிவகார்த்திகேயன் இப்படி பேசினார் என்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படம் வன்முறை போர் படமாக ரத்தம் தெறிக்க தெறிக்க ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு வேட்டு வைக்கத்தான் சிவகார்த்திகேயன் அப்படி பேசியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *