Lunch Box Recipe : உச்சுக்கொட்டி சுவைக்கத் தூண்டும் லன்ச் பாக்ஸ் ரெசிபி! தக்காளி சாதம்; முட்டை ஃப்ரை!
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பட்டை ஒரு துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – 1
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
செய்முறை
முதலில் அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து, அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவேண்டும்.