இந்தக் கோயில்தான் யு.ஏ.யி எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமையும் முதல் இந்துக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதில் 17 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு அமீரக அரசால் நன்கொடையாக வழங்கட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலை பாப்ஸ் என்கிற ஆன்மிக அமைப்பு கட்டிவருகிறது. இந்த அமைப்பு ஏற்கெனவே உலகெங்கும் 1,200 கோயில்களை நிறுவி நிர்வகித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயில்தான் யு.ஏ.யி எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமையும் முதல் இந்துக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதில் 17 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு அமீரக அரசால் நன்கொடையாக வழங்கட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலை பாப்ஸ் என்கிற ஆன்மிக அமைப்பு கட்டிவருகிறது. இந்த அமைப்பு ஏற்கெனவே உலகெங்கும் 1,200 கோயில்களை நிறுவி நிர்வகித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கற்கள் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. அமீரகம் 50 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை நிலவும் பகுதி. எனவே அங்கே வெப்பத்தால் பாதிக்காமல் இருக்கும் வகையிலான வெண்கற்களைத் தேர்ந்தெடுத்து இந்தக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோயிலின் உட்புறம் சுமார் 40,000 கன அடி பளிங்கு கற்கள் கோயிலில் ஸ்ரீராமர், விநாயகப் பெருமான், ஐயப்பன் என்று பல தெய்வங்களின் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்தச் சந்நிதிகளையும் பிற தூண்களையும் அமைக்க இந்தியாவில் இருந்து பாரம்பர்ய சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலில் மொத்தம் ஏழு கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு கோபுரங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு நாடுகளைக் குறிக்கின்றன என்கிறார்கள் கோயிலின் நிர்வாகத்தினர்.