வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம்… பிரித்தானியாவிலும் ஒலிக்கத் துவங்கியுள்ள குரல்கள்
கனடாவைப் போலவே, பிரித்தானியாவிலும், வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
நெருங்கும் தேர்தல்
பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரித்தானியாவில் நிலவும் வீடு தட்டுப்பாட்டைத் தீர்ப்பதுதான் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வழி என பேசப்படும் அளவுக்கு வீடு தட்டுப்பாடு குறித்த பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.
வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம்…
இந்நிலையில், வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்னும் தோரணையில் பிரித்தானியாவிலும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
The Sun என்னும் பிரபல பிரித்தானிய ஊடகத்தில், Matthew James Goodwin என்னும் பிரித்தானிய கல்வியாளர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரை, வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்னும் ரீதியில் எழுதப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வீடுகள் குறைவான அளவிலேயே கட்டப்படுவதாக தெரிவிக்கும் மேத்யூ, உதாரணமாக கடந்த ஆண்டு 300,000 வீடுகள் கட்டுவதை இலக்காக அறிவித்த பிரித்தானிய அரசு, வெறும் 178,000 வீடுகளை மட்டுமே கட்டியதாகத் தெரிவிக்கிறார்.
ஆண்டொன்றிற்கு பிரித்தானியாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோரைவிட 170,000 புலம்பெயர்ந்தோர் கூடுதலாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வார்கள் என்ற கணக்கீட்டின்படி அந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மேத்யூ, ஆனால், உண்மையில், புலம்பெயர்வோரின் நிகர எண்ணிக்கை 700,000 ஆக உள்ளது, அத்தனை பேருக்கு வீடுகள் தேவை என்கிறார்.
புலம்பெயர்தலால் வீட்டு வாடகையும் அதிகரிப்பதாகக் கூறும் மேத்யூ, பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒன்றில் கட்டுப்பாடில்லாத அளவில், பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்தல் இருக்கும், அல்லது, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வீடுகள் இருக்கும், இவை இரண்டும் அல்ல, இவற்றில் ஒன்றுதான் நடக்கும் என்னும் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்கிறார்.