நெல்சன் கழட்டி விட்டது போல!.. லோகேஷ் கனகராஜும் சிவகார்த்திகேயனை சீண்டவே இல்லையாம்.. எல்லாம் உருட்டா?
நெல்சன் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற மாட்டோமா என நினைத்து வந்தார். ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கிய நிலையில்
கண்டிப்பாக அந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலாவது பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இருந்த புகைப்படங்களும் வெளியாகின. ஆனால், இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவே இல்லை.
இந்நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படத்தில் சிவகார்த்திகேயன் முக்கியமான இடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் இதுவரை லோகேஷ் கனகராஜ் தன்னை அழைக்கவில்லை என்றும் நானும் உங்களைப் போல செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றும் கண்டிப்பாக எப்போது தலைவர் படத்தில் நடிக்க அழைத்தாலும் ஒரு சின்ன சீன் என்றாலும் நடிக்க ரெடி, நான் எப்போதுமே தலைவர் ஃபேன் தான் என பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் படத்தில் தொடர்ந்து நடிக்க சிவகார்த்திகேயன் தான் பிட்டுப் போட்டு வருகிறாரா என்றும் நெல்சனை போல லோகேஷ் கனகராஜும் இவன்லாம் அந்த வேலைக்கு சரிபட்டு வர மாட்டான் என ஒதுக்கி விடுகின்றனரா என கமெண்ட் போட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஒருவேளை தலைவர் 171வது படத்தில் தான் நடிக்கவிருப்பதை ரகசியமாக வைத்துக் கொள்ள சிவகார்த்திகேயன் இப்படி பேசியுள்ளாரா என்று அவரது ரசிகர்கள் இன்னமும் நம்பிக்கையுடன் லோகேஷ் கனகராஜ் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்கிற நம்பிக்கையை வளர்த்து வருகின்றனர்.