Bangladesh Captain: வங்கதேச கிரிக்கெட் அணியில் பெரிய மாற்றம்.. புதிய கேப்டனாக நஸ்முல் ஹுசைன் சாண்டோ நியமனம்!

வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

அதன்படி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மூன்று வடிவங்களிலும் புதிய கேப்டனின் பெயரை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஹகிப் அல் ஹசன் இனி எந்த வடிவத்திலும் அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என தெரிகிறது.

புதிய கேப்டன் யார்..?

வங்கதேச கிரிக்கெட் வாரியம் நஸ்முல் ஹுசைன் சாண்டோவை மூன்று வடிவங்களிலும் கேப்டனாக நியமித்துள்ளது. 25 வயதான சாண்டோ வங்கதேசத்தின் கேப்டனாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு நஸ்முல் ஹுசைன் சாண்டோ கேப்டனாக இருப்பார் என்பது தெளிவாகியுள்ளது.

வங்கதேசத்தின் இந்த திறமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஏற்கனவே, அந்நாட்டு அணிக்காக சில போட்டிகளில் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.

ஹகிப் அல் ஹசன் எங்கே..?

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நஸ்முல் ஹுசைன் சாண்டோ கேப்டனாக இருந்தார். இந்த போட்டிகளின்போது ஹாண்டோ, வங்கதேச அணியை சிறப்பாகவே வழிநடத்தினார். அதேசமயம் 2023 உலகக் கோப்பையின் கடைசிப் போட்டியில், ஷகிப் அல் ஹசன் இல்லாதபோது, ​​சாண்டோவுக்கு கேப்டன்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *