டெல்லியை சுற்றி பதற்ற சூழ்நிலை: பேரணி மீது கண்ணீர் புகை தாக்குதல்
இந்தியாவின் டெல்லியில் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (13.2.2024) விவசாயிகள் சங்கங்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளன.
டெல்லியை நோக்கி “டெல்லி சலோ” (Delhi Chalo) எனும் முழக்கத்துடன் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த விவசாயிகளின் பேரணி நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர்.
இந்நிலையில், டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தைகளில் தீர்வு
எனினும் அதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர்.
#WATCH | Farmers begin their 'Delhi Chalo' march from Shambhu Border. pic.twitter.com/tKEF6iEHkZ
— ANI (@ANI) February 13, 2024
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதற்றமாக இருந்து வருகிறது.
மத்திய அமைச்சர்களுடன் நேற்றைய தினம் (12) ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததையடுத்து விவசாயிகள் இந்த போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.