கமலுக்கு பதிலாக தனுஷ் : வினோத் திட்டம் என்ன?
துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை வினோத் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
பல கட்டமாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று, தற்போது கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் நடிகர் தனுஷின் புதிய படத்தை இயக்குவதற்கான பணிகளை மீண்டும் வினோத் தொடங்கியுள்ளார்.
இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஜூன், ஜூலை மாதங்களில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதை களம் சதுரங்க வேட்டை பாணியில் உருவாகும் என வினோத் தெரிவித்தார்.
இந்த நிலையில் கமலை வைத்து வினோத் இயக்குவதாக இருந்த மிலிட்டரி பின்னனியில் உள்ள கதையை தற்போது தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.