அச்சச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கடைசியில் காதலர் மீது புகார் கொடுத்த பிரபல நடிகை.. ஏன் தெரியுமா?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது காதலர் சுகேஷ் சந்திரசேகர் மீது போலீசில் பரபரப்பாக புகார் ஒன்றை அளித்து வழக்கும் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் மாடல் அழகியாக சுற்றித் திரிந்த ஜாக்குலினை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாற்றியதே சுகேஷ் தான் என கூறப்பட்டு வந்தது.
200 கோடி ரூபாய் பண மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டு இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கும் நடிகை ஜாக்குலின் இருந்த ரகசிய காதல் தொடர்பு கடந்த ஆண்டு அம்பலமானது.
கட்டிப்பிடித்து முத்தம்: படுக்கை அறையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விளக்கமாக கட்டிப்பிடித்து முத்தம் தரும் புகைப்படங்கள் வெளியான நிலையில், நாங்கள் இருவருமே காதலர்கள் தான் என ஜாக்குலின் போட்டு உடைத்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் அதுவே தற்போது அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
200 கோடி பணம் மோசடி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், அங்கிருந்தபடியே பிரபல தொழிலதிபர் மனைவியிடம் அவரது கணவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ200 கோடி வரை மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுகேஷுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்தை எல்லாம் சிறையில் இருந்தபடியே அனுப்பி அதிர வைத்தார்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள்: சுமார் 10 கோடிக்கும் அதிகமான உள்ள பரிசுகளை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் வழங்கியதை துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் நடிகையின் பாஸ்போர்ட்டையும் முடக்கி அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என தடை விதித்தனர்.