அஜித்குமாரின் நெருங்கிய நண்பர்.., வெற்றி துரைசாமி மறைவுக்கு ஷாலினி இரங்கல்
நடிகர் அஜித்குமாரின் நண்பரான வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நடிகை ஷாலினி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெற்றி துரைசாமி மறைவு
சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகன், இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது அவர் பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மீட்கப்பட்டார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில, 8 நாட்களுக்கு பிறகு நேற்று வெற்றி துரைசாமியின் உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 6 மணிக்கு தகனம் செய்யப்பட இருக்கிறது.
ஷாலினி இரங்கல்
இந்நிலையில், வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் சோகத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே சமயம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல்” தெரிவித்துள்ளார். அதோடு, வெற்றி துரைசாமியுடன் அஜித் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக கடந்த 2021 -ம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்” என்று குறிப்பிட்டு அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவும் வைரலாகி வருகிறது.