மருத்துவ குணம் நிறைந்த ”பிரண்டை” சாப்பிடுவதால் என்ன பயன்?
கொழுப்பு சத்து நிறைந்தவர்கள், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து உள்ளவர்கள் பிரண்டையை உணவாக எடுத்துக் கொண்டால் குணமடையும்.
இதனை சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகும், இதயம், எலும்புகள் பலப்படும். ஈறுகளில் ரத்த கசிவு, வாயு பிடிப்பை பிரண்டை குணப்படுத்துகிறது.
மேலும் இது ஒவ்வாமைக்கு மிகச் சிறந்த அருமருந்தாக உள்ளது. இரைப்பை அலர்ஜி, ஜீரணக் கோளாறு பசியின்மை போன்றவற்றை சரி செய்வதற்காக பிரண்டை துவையல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மூலம், குடற்புழு நீங்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக உள்ளது.