ஈறுகளில் பயங்கர வலியா? ‘இந்த’ வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்..
Gingivitis, Sore Gums Home Remedies: ஈறுகளில் ஏற்படும் அழற்சி காரணமாக வலி ஏற்பட்டு, ரத்த கசிவு ஏற்படலாம்.
வாயில் சரியான சுகாதாரத்தை பேண வில்லை என்றால் இந்த பிரச்சனை ஏற்படும். அப்படி ஏற்படும் வலிகளை, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நிவர்த்தி செய்யலாம். இவை, அந்த வலியை சீக்கிரமாக நீக்க உதவும். அவை என்னென்ன வைத்தியங்கள் தெரியுமா?
உப்பு நீரை வைத்து வாய் கொப்பளிக்கலாம்:
உப்பு நீரை வைத்து வாய் கொப்பளிப்பது ஈறு வீக்கத்தை அல்லது ஈறு அழற்சியை சரிசெய்ய உதவும். வாய் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய சரியாக உபயோகப்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் இது. உப்பை, சாதாரன நீரில் கலக்கி அதை வாயில் போட்டு கொப்பளிக்க வேண்டும். இதனால், வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க உதவும். இதனால் வாயில் எரிச்சலூட்டும் ஈறுகள், சரியாகும். இந்த எளிய மருத்துவ முறை மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.
ஆயில் புல்லிங்:
ஆயுர்வேத முறைகளில் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெயில் நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. அதனால் இது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவும். தேங்காய் எண்ணெய்யை 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாயில் போட்டு கொப்பளிக்க வேண்டும். வாயில் ஏற்படும் ஈறு பாதிப்புகளை குறைக்கவும் இது உதவும். வாய் புண்களையும் இது நீக்கும்.
எலுமிச்சை எண்ணெய்:
சாதாரண மவுத்வாஷை விட எலுமிச்சை எண்ணெயினால் செய்த மவுத்வாஷ், வாய் சுகாதாரத்தை பாதுகாக்க உதவும். வாயில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ளவும், இது உதவும். ஈறு பாதிப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் இது குறைக்கும்.