அந்த இளம் வீரர் தான் பிரச்சனை.. ஈகோவை தொட்டால் மட்டுமே வீழ்த்த முடியும்.. இங்கிலாந்து வீரர் அட்வைஸ்!

இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருவதாக முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியால் எளிதாக டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்பதால், இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முழுக்க முழுக்க இளம் வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இதனால் ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் 321 ரன்களை விளாசி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஜெய்ஸ்வால் இருந்து வருகிறார்.

இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டுமென்றால் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை விரைந்து வீழ்ந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரிய வீக்னஸ் இல்லாத ஜெய்ஸ்வால் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என்று தெரியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் பேசுகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வீக்னஸ் என்று எதுவும் கிடையாது. அதனால் அவரை வீழ்த்த வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்.

இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே ஆஃப் ஸ்பின்னர்களுக்கு பவுலிங் கொடுத்து அவரை ஷாட்கள் ஆட வைக்க தூண்டுவதே ஒரே வழி. அவரின் ஈகோவுடன் இங்கிலாந்து பவுலர்கள் விளையாட வேண்டும். அதேபோல் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு சவாலாக இருந்துள்ளார்.

அதேபோல் ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்துள்ளது. முதல் பேட்டிங் அல்லது இரண்டாவது பேட்டிங் என்றாலும் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடியும் என்று தெரிகிறது. இந்த இங்கிலாந்து அணி கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடி வருகிறது. இதனால் சில நேரங்களில் 250 முதல் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிவிடுகிறார்கள். இந்த போட்டியில் டாப் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர் பெரிய சதத்தை விளாச வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வெற்றியை பற்றி சிந்திக்க முடியும் என்று கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *