IND vs ENG – இந்த ஒரு போட்டோ போதும்.. 3வது டெஸ்டில் யார் விளையாடுகிறார்கள் என்று சொல்லிவிடலாம்!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கோலி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 3வது டெஸ்டில் தேர்வு செய்யப்பட்ட ராகுல், திடீரென்று என்று காயம் காரணமாக வெளியேறினார்.
இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயர் மோசான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது கூடுதல் வீரராக தேவுதட் படிக்கல் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மேலும் கேஎஸ் பரத், தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பேட்டிங் செய்யாமல் சொதப்பினார். இதனால் யாருக்கு தான் வாய்ப்பு கிடைக்க போகிறது.
யார் பிளேயிங் லெவனில் இடம் பெற போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இதற்கு விடை தரும் படி, ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இந்திய வீரர்கள் கேச்சிங் பயிற்சியை ஸ்லிப்பில் நின்று மேற்கொண்டனர். இதன் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராகவும், சர்பிராஸ் கான் முதல் ஸ்லிப்பிலும், 2வது ஸ்லிப்பில் ஜெய்ஸ்வால், Gully இடத்தில் ரஜத் பட்டிதாரும் இருந்தார்கள். பொதுவாக எந்த வீரர்கள் அணியில் இடம்பெற போகிறார்களோ, அவர்கள் இப்படி நின்று தான் பயிற்சி எடுப்பார்கள்.
இதனால் 3வது டெஸ்டில் இந்த வீரர்கள் இடம்பெறுவது உறுதி என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும், ஸ்லிப் பகுதியில் முற்றிலும் புதிய வீரர்கள் நிற்பதால், அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று ராகுல் டிராவிட் விசேஷ பயிற்சியை வழங்கினார். இதன் மூலம் துருவ் ஜூரல், சர்பிராஸ் கான் ஆகியோர் 3வது டெஸ்டில் அறிமுகமாவது உறுதியாகி விட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜூரலும், ரஞ்சியில் அபாரமாக விளையாடிய சர்பிராஸ் கானும், 2வது டெஸ்டில் களமிறங்க போகும் ரஜத் பட்டிதார் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் பேட்டிங்கில் ரோகித்தை தவிர மற்ற அனைவரும் இளம் வீரர்கள் என்பதால் இந்தியாவின் புதிய தொடக்கமாக 3வது டெஸ்ட் இது இருக்கும்.