புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர்… ராணியார் கமிலாவிடம் வன்மம் தீர்த்த இளவரசர் ஹரி
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சார்லஸ் மன்னரிடம் நலம் விசாரிக்க லண்டன் வந்திருந்த இளவரசர் ஹரி, ராணியார் கமிலாவை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் சந்திக்கும் அறையில்
சார்லஸ் மன்னரிடம் 30 நிமிடங்கள் நலம் விசாரித்துள்ள இளவரசர் ஹரி, தாங்கள் இருவரும் சந்திக்கும் அறையில் ராணியார் கமிலாவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ராணியார் கமிலாவின் தோழியும் பத்திரிகையாளருமான Petronella Wyatt என்பவரே தொடர்புடைய தகவலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார். கடந்த வாரம் மன்னர் சார்லஸ் புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் வெளிப்படுத்த, உடனடியாக கலிபோர்னியாவில் இருந்து லண்டன் திரும்பினார் இளவரசர் ஹரி.
ஆனால் 30 நிமிடங்கள் மட்டுமே மன்னர் சார்லசுடன் சந்தித்துப் பேசும் வாய்ப்பு இளவரசர் ஹரிக்கு அமைந்தது. இந்த சந்திப்பின் போதே, ராணியார் கமிலா உடனிருக்க வேண்டாம் என்று ஹரி நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தமது நினைவுக்குறிப்புகள் நூலிலும், ராணியார் கமிலா தனது இமேஜை உயர்த்துவதற்காக அரச குடும்பத்தைப் பற்றிய கதைகளை ஊடகங்களுக்கு கசியவிடுகிறார் என ஹரி கடுமையாக விமர்சித்திருந்தார்.
மிக ஆபத்தான பெண் என கமிலாவை குறிப்பிட்டிருந்த ஹரி, தமது நிலையை உயர்த்துவதற்காக ராணியார் கமிலா, தம்மை பலியாக்கியதாக ஹரி குற்றஞ்சாட்டியிருந்தார்.
கோபப்படுத்தும் நடவடிக்கைகள்
இளவரசர் ஹாரி செவ்வாயன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து பத்து மணி நேர பயணத்தில் லண்டனில் தரையிறங்கி உள்ளூர் நேரப்படி 2.42 மணிக்கு கிளாரன்ஸ் மாளிகை வந்தடைந்தார்.
மன்னர் சார்லசுடன் சுமார் 30 நிமிடங்கள் நலம் விசாரித்துள்ள ஹரி, அன்றிரவே அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஹரி மற்றும் மன்னர் சார்லஸ் சந்திப்பானது எந்த சிக்கலும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது என்றே கூறுகின்றர்.
மன்னர் சிகிச்சையில் இருப்பதால், அவரை கோபப்படுத்தும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமிலாவை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று தாமும் சகோதரர் வில்லியமும் பலமுறை கெஞ்சியதாக ஹரி தனது நினைவுக்குறிப்புகள் நூலில் வெளிப்படுத்தியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போதும், மன்னருடனான சந்திப்பில் ராணியார் கமிலாவை புறக்கணித்து இளவரசர் ஹரி வன்மம் தீர்த்துள்ளதாக கூறுகின்றனர்.