மறந்த கடவுச்சொல்… ரூ 2,095 கோடி மதிப்பிலான பிட்காயின்களை இழக்கவிருக்கும் ஜேர்மானியர்
பிட்காயின் முதலீட்டாளர் ஒருவர் தற்போது சுமார் ரூ 2,095 கோடி மதிப்பிலான சொத்துக்களை அனுபவித்திருப்பார், தனது பிட்காயின் கடவுச்சொல்லை மறக்காமல் இருந்திருந்தால்.
சுமார் 7,002 பிட்காயின்களை
ஜேர்மானியரான ஸ்டீபன் தாமஸ் என்பவர் தமது பிட்காயின் முதலீடுகளுக்கான கடவுச்சொல்லை கடந்த 2011ல் தொலைத்துள்ளார். அதன் பின்னர் தனது முதலீடுகளை மீட்க முடியாமல் போராடி வருகிறார்.
2011 வரையில் சுமார் 7,002 பிட்காயின்களை ஸ்டீபன் தாமஸ் வாங்கியுள்ளார். தற்போதைய நிலையில், பல நூறு மில்லியன் மதிப்பிலானவை. ஆனால் அந்த பிட்காயின்கள் அனைத்தும் கடவுச்சொல் பாதுகாப்புடன் IronKey எனப்படும் ஹார்ட் டிரைவ் ஒன்றில் பாதுகாத்து வந்துள்ளார்.
அந்த ஹார்ட் டிரைவின் கடவுச்சொல்லை மறந்தால், 10 வாய்ப்புகள் அளிக்கப்படும், அதன் பின்னர் அந்த ஹார்ட் டிரைவ் எந்த நிலையிலும் திறக்க முடியாமல் போகும்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஸ்டீபன் தாமஸ் இதுவரை 8 முறை அந்த ஹார்ட் டிரைவை திறக்க முயன்று தோற்றுள்ளார். இன்னும் இரண்டே வாய்ப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
மறக்காமல் இருந்திருந்தால்
தற்போது ஒரு பிட்காயின் மதிப்பானது 39,315 பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. கடவுச்சொல்லை மறக்காமல் இருந்திருந்தால் குறைந்தது ரூ 2,000 கோடி சொத்துக்களுக்கு அவர் உரிமையாளராக இருந்திருப்பார்.
ஸ்டீபன் தாமஸ் மட்டுமின்றி, தொடக்க நாட்களில் மிக மலிவான விலைக்கு பல ஆயிரம் பிட்காயின் வாங்கிக் குவித்தவர்கள் கடவுச்சொல்லை மறந்து, மொத்தமாக தங்கள் முதலீடுகளை இழந்துள்ளனர். இதுவரை 100 பில்லியன் பவுண்டுகள் வரையில் கடவுச்சொல் மறதியால் மக்கள் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.