சருமத்தை பாதுகாக்கும் ஆளி விதை இட்லி பொடி: எப்படி செய்யலாம்?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தையும் உடலையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
அந்தவகையில் உடலை சீராக பராமரிப்பதற்கு உதவும் விதையாக ஆளி விதை இருந்து வருகிறது. ஆளி விதைகள் முடி வளர்ச்சி, சரும ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை செய்கின்றன.
எனவே ஆளி விதை வைத்து எப்படி வித்தியாசமான முறையில் இட்லி பொடி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
ஆளிவிதை – 1 கப்
உளுந்தம் பருப்பு – 1/4 கப்
வரமிளகாய் – 10
பூண்டு – 50 கிராம்
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காய தூள் – 1 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை – 1 கைபிடி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆளி விதையை சேர்த்து வறுத்தெடுத்து அதை ஆற வைக்கவும்.
பின் ஒரு கடாயில் உளுந்தம் பருப்பை சேர்த்து வறுத்தெடுத்து ஆளி விதையுடன் ஆற வைக்கவும்.
பிறகு வர மிளகாய், சீரகம், புளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அனைத்து பொருட்களையும் சூடி ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் அதில் உப்பு சேர்த்து அரைக்கவும்.
இறுதியாக ஆளி விதை பொடியை நன்றாக ஆற விட்டு ஒரு காற்று புகாத பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
இதை நெய் அல்லது எண்ணெய் மற்றும் சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.