குழந்தை அழுவது போல் கனவா? கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சிக்கோங்க
கனவுகள் என்பது நம் வாழ்க்கையில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே காட்டுவதாகும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சியடைவோம்.
அதுவே தீய கனவுகள் கண்டால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோவில் கோவிலாக செல்வோம்.
பரிகாரம் என்பது, நாம் காணும் தீய கனவை யாரிடமும் கூறாமல் இருப்பது தான். மேலும், தீய கனவை கண்ட அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்ததும், பசுவிற்கு பால் மற்றும் புல்லை தானமாக வழங்க வேண்டும்.
கனவு அறிவியலின் அடிப்படையில், ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. ஒரு சிலருக்கு தோன்றும் கனவானது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில் ஒரு குழந்தை கனவில் அழுவது போன்று தெரிந்தாலும் பல அர்த்தங்கள் உள்ளன. அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
குழந்தை அழுவது போல் கனவு கண்டால்
உங்கள் கனவில் நீங்கள் சிறிய குழந்தைகள் அழுவது போல் கனவு கண்டால் உங்களது ஆசைகளில் ஏதாவது ஒன்று சீக்கிரம் நிறைவேறும் என்பது அர்த்தமாகும்.
கனவில் இரட்டைக் குழந்தைகளைக் கண்டால்
உங்கள் கனவில் நீங்கள் இரட்டை குழந்தைகளை கண்டால், உங்கள் வேலையில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் உங்களுக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் அர்த்தப்படும்.
பெரிய குழந்தைகள்
அதே கனவில் வயது கூடிய குழந்தைகளைப் பார்த்தால், வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்படப் போகிறது என்பது அர்த்தம்.
புதிதாக பிறந்த குழந்தையை கனவில் கண்டால் உங்கள் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவிர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது.