இது தெரியுமா ? அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால்…

அமுக்கரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் வயோதிகம் போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும், உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியேற்றி, உடலை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அமுக்கரா திறமையையும், உடல் வலிமையையும் அதிகரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டினை பெருக்கும். ஞாபக சக்தி மற்றும் திறமைய அதிகரிக்கும்.
நன்றாக தூக்கம் வர சீமை அமுக்கரா வேர் நன்கு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் (5கிராம்) வீதம் இரவில் உணவிற்குப் பிறகு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மூட்டுகளின் வீக்கத்தை குறைக்கும். குதிரை போன்ற உடல் வலிமையை தரும். அஸ்வகந்தா மன அழுத்தம், மனப்பதட்டம், தூக்கமின்மை, நரம்பு கோளாறு போன்ற குறைபாடுகளில் இருந்து விரைவில் வெளியேற உதவுகிறது.
அமுக்கிரா உடன், சுக்கு சேர்த்து, அரைத்து கட்டி, வீக்கம் முதலியவற்றிற்கு, பற்று போடலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்படும் கை, கால் சோர்வு இவைகளை குணப்படுத்த அமுக்கரா பயன்படுகிறது.மேலும் அதிக வலிமையையும், சக்தியினையும் தருகிறது.
வயிற்று வலி , வயிற்றுப் புண் குணமாக அதிமதுரம் பொடி (100கிராம்) , சீமை அமுக்கரா பொடி (100 கிராம்) இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் 3 வேளை தலா 2 கிராம் வீதம் உணவிற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, வயிற்றுபுண் குணமாகும்.
அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.
ஆண்மைக்குறைவு நீங்க பூனைகாலி விதை (100கிராம்) ,சீமை அமுக்குரா வேர் (100கிராம்) இவை இரண்டையும் இடித்து பொடியாக்கி ஒன்றாகக் கலந்து காலை , மாலை என இருவேளையும் (1ஸ்பூன்) வீதம் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருக்கம் உண்டாகும்.
நீர்முள்ளி விதை, குறுந்தொட்டிவேர், வெள்ளரி வேர், அமுக்கரா கிழங்குப் பொடி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டுவர, விந்தணுக்கள் சார்ந்த குறைபாடுகள் நீங்கும். இதன் இலைகளுடன் மிளகு சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வழங்க, காய்ச்சலின் தீவிரம் தணியும்.
அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.
மூட்டு அழற்சி , பசியின்மை நீங்க அமுக்கரா கிழங்குப் பொடியை (2கிராம்) அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.
கை , கால் , இடுப்பு , மூட்டு , தொடை வலி குணமாக அமுக்கரா , சுக்கு , ஏலக்காய் , சித்தரத்தை இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து வைத்துக்கொண்டு காலை , மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவுக்கு உணவிற்குப் பின் சாப்பிட்டு வத்தால் கை, கால் , மூட்டு , இடுப்பு ,தொடை வலி அனைத்தும் குணமாகும்.
அமுக்கரா கிழங்கு, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, சிறுநாவற் பூ ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ‘அமுக்கரா சூரணம்’ எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி! மற்ற மருந்துகளின் ஆற்றலை அதிகரிக்கவும், சில மருந்துகளைச் சுமந்து செல்லும் வாகனமாகவும் அமுக்கரா சூரணம் பயன்படுகிறது.
அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.
இதன் கிழங்குடன் சில மூலிகைகள் சேர்த்து நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தலை முழுகும் எண்ணெய் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் மாயங்கள் நிகழ்த்தும்.
அமுக்கரா கிழங்கு பொடி, கேழ்வரகு மாவு, சுக்குத் தூள், கஸ்தூரி மஞ்சள் இணைந்த கலவையை, சாதம் வடித்த தண்ணீரில் குழைத்து வீக்கங்களின் மீது தடவி வர விரைவில் குணம் கிடைக்கும். அமுக்கரா, சிற்றாமுட்டி தாவரத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் ‘அசுவகந்தாதி எண்ணெய்’, வெளிப்பிரயோகமாகப் பயன்படும் சிறந்த உடல்பிடி மருந்து.
உடல் வலி , அலுப்பு , களைப்பு நீங்க அமுக்கரா பொடியை தினமும் 2ஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் அலுப்பு, உடல்வலி, களைப்பு மாறும்.
உடல் பருமனாக அமுக்கரா பொடி (2கிராம்) அளவு எடுத்து நெய்யில் கலந்து இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் பருமனாகும்.