இது தெரியுமா ? தினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால்…

இந்த ஸ்பைக்கி பந்து முதலில் டென்மார்க்கில் மனச்சோர்வு கண்டறியப்பட்ட மனநல நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது எனப்படுகின்றது.
இந்த வகை பந்துகளை நாம் வீட்டிலேயே, ஒருசில ஆரோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு தருகின்றது.
புண்ணான பாதங்களை சரிசெய்ய பயன்படுத்தும் அற்புதமான பொருட்களுள் ஒன்று தான் ஸ்பைக்கி மசாஜ் பந்து. இது சிறு சிறு முட்களைக் கொண்ட பந்தாகும்.
பாதங்களில் கொடுக்கப்படும் மசாஜ்களானது மூட்டு வலிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த வகை சிகிச்சையால் வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், கால்களுக்கான உடற்பயிற்சி போன்றும் இருப்பதால் கால்கள் வலிமையாகும். ஏற்கனவே கால் மூட்டுக்களில் இருக்கும் காயங்களில் இருந்து விரைவில் விடுபட, முட்களைக் கொண்ட பந்துகளைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்வது நல்லதாம்.
இந்த பந்தை கொண்டு மசாஜ் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
கால் மூட்டுக்களில் இருக்கும் காயங்களில் இருந்து விரைவில் விடுபட, முட்களைக் கொண்ட பந்துகளைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்வது நல்லதாம்.
ஸ்பைக்கி பந்துகளை பாதங்களுக்கு அடியில் ஒரு நிமிடம் வைத்து தினமும் 10-20 நிமிடம் சுழற்றும் போது, உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, உடல் மற்றும் மனம் அமைதியாகும். இதன் விளைவாக இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
அடிக்கடி தலைவலி வருமாயின் ஸ்பைக்கி பந்தை கால்களுக்கு அடியில் வைத்து மசாஜ் செய்யுங்கள்.
வாரத்திற்கு 3 முறை 10 நிமிட பாத மசாஜ் மேற்கொள்வதால், மனநிலை மேம்படும், மன பதற்றம் சரியாகும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.
ஸ்பைக்கி பந்துகளைக் கொண்டு பாதங்களுக்கு மசாஜ் கொடுப்பதால், மன பதற்றம் குறைவதாக புற்றுநோயாளிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த முறை மன இறுக்கத்தையும் சரிசெய்ய உதவும்.
ஸ்பைக்கி பந்தை பாதங்களுக்கு அடியில் வளைவான பகுதியில் வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதால் நிச்சயம் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஸ்பைக்கி பந்துகளைக் கொண்டு தினமும் பாதங்களுக்கு மசாஜ் கொடுத்து, போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். முக்கியமாக நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.