ஆட்டோகிராஃப் தழுவல் ; பிரேமம் படம் மீது வழக்கு தொடராமல் தவிர்த்தது ஏன்? – இயக்குநர் சேரன் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!

தனது ஆட்டோகிராஃப் படத்தையொட்டிய கதையம்சம் கொண்டபோதிலும் மலையாளத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படம் மீத வழக்குப் பதிவு செய்வதை தவிர்த்துள்ளார் இயக்குநர் சேரன். இதற்கு காரணம் கேட்டபோது அவர் சொன்ன பதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு பிரேமம் படம் வெளியானது. ஒரு இளைஞனுக்கு அவனது பள்ளி, கல்லூரி, தொழில் வாழ்க்கையின்போது ஏற்படும் காதல் தான் இந்த படத்தின் கதையம்சன்.

மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்து, தேசிய அளவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் கவனம் பெற்றார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. படம் வெளிவந்தபோது, இது சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தின் சாயலில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பிரேமம் படம் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்று சேரனிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது-

பொதுவாக இந்திய சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் படங்களை பார்த்து அதன் மேல் ஈர்ப்பு உண்டாகி இங்கு படங்களை எடுப்பார்கள். ஹாலிவுட் படங்களை பார்த்துதான் ஈர்ப்பு ஏற்பட வேண்டுமா? மற்ற மாநிலங்கள் இயக்குனர்களை ஈர்க்க கூடாதா?

நம்முடைய கதையாக இருந்தாலும் அதை இன்னொருவர் நம்மை விட சிறப்பாக படமாக எடுத்தால் அதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டுமே தவிர, பொறாமைப்படக் கூடாது. எனவேதான் நான் பிரேமம் படம் மீது கேஸ் போடவில்லை என்று பேசியுள்ளார். இயக்குநர் சேரனின் இந்த முதிர்ச்சியான கருத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரனின் ஆட்டோகிராஃப் படத்தை விடவும் பிரேமம் படம் பல மடங்கு வசூலித்தது கவனிக்கத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *