பெண்களே இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! வளமான எதிர்காலம் உறுதி!

பெண்கள் மேற்படிப்புக்கு செல்வதும், படிப்பு முடிந்த பின்னர் வேலைகளுக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. பெண்களால் செய்ய முடியாது என கூறப்பட்ட வேலைகளில் எல்லாம் இப்போது பெண்கள் சாதித்து வருகின்றனர்.

சமூக ரீதியான சவால்களை கடந்து வேலைக்கு செல்லக் கூடிய இந்த யோசனைகளை முறையாக பின்பற்றினால் எளிதில் அவர்களால் நிதி மேலாண்மையிலும் வெற்றி பெற முடியும். அதற்கான வழிகாட்டி தான் இது.

வாய்ப்பை தவறவிடக் கூடாது: முன்பெல்லாம் பெண்களுக்கு கல்வி சார்ந்தும், வேலை சார்ந்தும் பல்வேறு சமூக ரீதியான கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் சமகாலத்தில் அவை பெரிய மாற்றம் கண்டுள்ளன. நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு பெண்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதனை பயன்படுத்திக் கொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து நிதி சார்ந்த வளர்ச்சியை அடையலாம்.

நிதிசார்ந்த கல்வி: நிதி சார்ந்த சுதந்திரத்தின் அடித்தளம் கல்வி மூலமே அமைக்கப்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் நிதி நுண்ணறிவை மேம்படுத்துவது அவசியம் .பெண்கள் வரவு செலவு திட்டம், முதலீடுகள், கடன் மேலாண்மை போன்ற கருத்துக்களை புரிந்து கொண்டால் அதன் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும்.

வேலை வாய்ப்பு திட்டமிடல் : சரியான வேலை வாய்ப்பு பாதையை தேர்வு செய்வதும், இலக்குகளின் நிர்ணயிப்பதும் நிதி சுதந்திரத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் தங்களது திறமைகள் மற்றும் நலன்களுக்கு ஏற்றவாறு தொழில் வாய்ப்புகளை தீவிரமாக தேட வேண்டும், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவது ஆகியவற்றிலும் திறமையாக இருக்க வேண்டும்.

காலத்திற்கு ஏற்ப திறன்களை மேம்படுத்த வேண்டும். இது நிதி ரீதியாக நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான அத்தியாவசிய நடவடிக்கை ஆகும்.

சேமிப்பு பழக்கம்: அவசரகால நிதியை உருவாக்குதல், ஓய்வூதிய திட்டங்களுக்கு பங்களிப்பு செய்தல், வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடுகளுக்கு ஒதுக்குதல் ஆகியவை முக்கியமானது.. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து ஸ்மார்ட்டான முறையில் முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகை போன்ற முதலீட்டு வழிமுறைகளை பெண்கள் ஆராய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டுகள்: முதலீடு செய்வதில் புதியவர்களாக இருக்கும் பெண்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. எஸ்ஐபி போன்ற முறையான முதலீட்டு திட்டங்களில் பெண்கள் சிறு தொகைகளுடன் தொடர்ந்து முதலீடு செய்ய தொடங்கலாம் இதன் மூலம் பின்னாளில் அவர்கள் பெருமளவு நிதியை சேமிக்க முடியும்.

தொழில்முனைவோர்: தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை பெண்கள் கட்டாயம் முன்னெடுக்கலாம். இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை பெண்கள் பயன்படுத்தி தொழில்முனைவோராகி மற்ற பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்கலாம்.

காப்பீடு மற்றும் நிதி திட்டமிடல்: பெண்கள் தங்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க முறையான காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வது மற்றும் நிதி திட்டமிடலை மேற்கொள்வது அவசியமாகிறது. குறிப்பாக எதிர்பாராத செலவுகள் வரும் போது நீங்கள் எடுத்து கொண்ட மருத்துவ காப்பீடும், எடுத்து வைத்த அவசர கால நிதியும் பேருதவியாக இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *