இனியும் உங்களை நம்ப முடியாது.. 13500 ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஆடிப்போன நிர்வாகம்..!!
இந்தியாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களான Paytm மற்றும் Byjus-ல் சுமார் 13,500 ஊழியர்கள், நிறுவனங்கள் அதிகரித்து வரும் ஒழுங்குமுறை பிரச்சனைகள் மற்றும் முதலீட்டாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்வதால் அச்சத்தில் வேறு நிறுவனங்களில் வேலை தேடுகின்றனர்.
இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது Paytm நிறுவனத்தில் இருந்து 6,500க்கும் மேற்பட்ட ஊழியர்களும், பேடிஎம் நிறுவனத்தில் சுமார் 7000 ஊழியர்களும் புதிய வேலையைச் சேர்வு செய்யத் தயார் நிலையில் தங்களுடைய ப்ரொபைல்-ஐ ஓப்பன் டூ வொர்க் வகையில் வைத்திருப்பதாகப் பணியாளர்கள் நிறுவனமான Xpheno தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் உலகிலேயே அதிக மதிப்புடைய எட்டெக் நிறுவனமாக இருந்த பேடிஎம் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்புடன் மிகவும் வலிமையுடன் இருந்தது, ஆனால் கொரோனா தொற்றுக்குப் பின்பு அதன் வர்த்தகம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது மூலம் அதன் உயர் மதிப்பீட்டை இழந்தது.
இதைத் தொடர்ந்து பைஜூஸ்-ன் வர்த்தக மாடல் புதிய மற்றும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்க ஏதுவாக இல்லை. இந்த நிலையில் பைஜூஸ் சேவைகளைப் பிரபலப்படுத்த புட்பால் GOAT மெஸ்ஸி-ஐ விளம்பர தூதராகப் பைஜூஸ் ஒப்பந்தம் செய்த காலகட்டத்திலேயே அதிகப்படியான ஊழியர்களை பைஜூஸ் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது பெரும் சர்ச்சையானது.
அதன் பின்பு ஊழியர்களின் குற்றச்சாட்டு, முதலீட்டாளர்கள் உடன் பிரச்சனை, நிதிநிலை அறிக்கையை வெளியிடுவதில் தாமதம், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத கடுமையான சூழல் என அடுக்கடுக்கான பிரச்சனைகளில் தற்போது பைஜூஸ்-ன் முதலீட்டாளர்கள் குழு அதன் நிறுவனர்களை நிர்வாகத்தை விட்டு வெளியேற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.
இதேவேளையில் பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்தரன் மற்றும் அவரது சகோதரர், மனைவி ஆகியோரை நீக்க முதலீட்டாளர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் பைஜூஸ் நிறுவனத்தின் மீது அதன் ஊழியர்களுக்கு நம்பிக்கை இழந்து புதிய வேலையைத் தேட துவங்கியுள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பு 2000-3000 பேர் மட்டுமே பேடிஎம் ஊழியர்கள் மாற்று வேலையைத் தேடி வந்த நிலையில், தற்போது 5000 பேர் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை எளிதாக்கிய முதலும் முக்கிய நிறுவனம் பேடிஎம், சில வருடங்களுக்கு முன்பு பேடிஎம் நிறுவனத்தில் சீன முதலீட்டாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது குறித்து விவாதம் எழுந்தது. ஐபிஓ வெளியிட்ட பின்பு பல முறை சீன முதலீட்டாளர்கள் தனது பங்குகளை விற்பனை செய்தது மூலம் இந்தப் பிரச்சனை சற்றுத் தணிந்தது.
இந்த நிலையில் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவைகளில் முறையாக நிர்வாகம் செய்யாமல் இருப்பது குறித்து ஆர்பிஐ பல முறை எச்சரித்துச் சரி செய்ய அவகாசம் கொடுத்தது. ஆனால் இதைக் குறித்த காலத்திற்குள் பூர்த்திச் செய்யாத பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சேவைகளுக்குப் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் தடை விதிப்பதாக ஆர்பிஐ ஜனவரி 31 ஆம் தேதி அறிவித்தது.
இதன் பின்பு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தொகை முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமலாக்கத் துறை ஆய்வு மேற்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் பிரச்சனையைச் சரி செய்யப் பேடிஎம் நிறுவனரும், தலைவருமான விஜய் சேகர் சர்மா ஆர்பிஐ, நிதியமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து வருகிறார்.
இந்தப் பிரச்சனை எப்போது முடியும் எனத் தெளிவாகக் கூற முடியாத நிலையில், இதன் ஊழியர்கள் தங்களின் குடும்பத்தின் நிதி நிலை பாதுகாப்பு கருதி வேறு வேலையைத் தேட துவங்கியுள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த 800 -1200 ஊழியர்கள் புதிய வேலையைத் தேடி வந்த நிலையில் தற்போது 5000 பேர் அதிகரித்து மொத்தம் 6500 பேர் புதிய வேலைவாய்ப்புகளைத் தேட தயாராகியுள்ளனர்.