ஆர்டர் செய்த சாலட்டில் உயிருடன் நெளிந்த நத்தை – வைரலாகும் வீடியோ!

சமீப காலமான கடைகளில் வாங்கிய உணவில் பல்லி, கரப்பான் பூச்சி போன்ற உயிரினங்கள் இறந்து கிடப்பதையும், அதனை கண்டறிந்த வாடிக்கையாளர்கள் அவற்றை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திருப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் உயிருடன் வாழும் உயிரினங்கள் உணவில் இருக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

சமீபத்தில் பெங்களூருவில் வசிக்கும் நபர் ஒருவர், ஸ்விக்கில் சாலட் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட சாலட்டில் உயிருள்ள நத்தை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் உயிருள்ள நத்தை ஊர்ந்து செல்வதை காண முடியும்.

அதில், பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர், ஸ்விக்கி மூலம் லியோன்ஸ் கிரில் என்ற கடையில் இருந்து சாலட் டெலிவரி செய்யப்பட்டதாக குறிப்பிட்டு, இனி லியோன்ஸ் கிரில்லில் இருந்து ஆர்டர் செய்வதில்லை என்று அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தனது வருத்தத்தை ஷேர் செய்துள்ள அவர், சிங், சாலட்டில் இருந்த கீரையில் ஒரு உயிருள்ள நத்தை இருந்தது, அதிர்ஷ்டவசமாக நான் அதை கவனித்தேன். இது முற்றிலும் அருவருப்பானது. முடிந்தால் இனிமேல் இங்கு ஆர்டர் செய்யாதீர்கள். நீங்கள் வெளியில் வாங்கி உணவு அருந்தும் முன் கவனமாக இருங்கள் என எச்சரிக்கை வைத்துள்ளார்.

மேலும் பெங்களூரு மக்கள் கவனத்திற்கு என்று கீரையில் இருந்து நத்தை வெளிவரும் காட்சியை வீடியோவாக இணைத்துள்ளார். மேலும் ஸ்விக்கி, மற்றவர்களுக்கு இது போல் நடக்காமல் இருக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, @SwiggyCares தனது தவறை ஒப்புக்கொண்டு, இதற்கு பதிலளிக்கும் விதமாக வணக்கம், இந்த சம்பவம் மோசமானது. ஆர்டர் ஐடியை ஷேர் செய்து எங்களுக்கு உதவுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்து கொள்வோம் என உறுதி அளித்துள்ளனர்.

இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் யூசர் ஒருவர், தற்போது ஸ்விக்கியில் இதுபோல பல்வேறு தவறுகள் நடப்பது தொடர்கிறது, சில நாட்களுக்கு முன்பு டெலிவரி எக்சிகியூட்டிவ் எனது ஆர்டரைத் திருடி விட்டார் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் எம்சி டொனால்ட் மற்றும் கேஎஃப்சி போன்ற உணவகங்களில் இருந்து, எப்போதும் ஆர்டர் செய்யுங்கள், இந்த லோக்கல் உணவகத்தை நம்பாதீர்கள், இதுபோன்ற கடைகளில் சுத்தமாக இருப்பதற்கு முக்கியத்தும் கொடுக்க மாட்டார்கள் என்று பதிவிட்டுளார். மற்றொரு யூசர் ஒருவர், இதேபோல் சமீபத்தில் நான் எழுப்பிய புகாருக்கு ஸ்விக்கி தரப்பில் இருந்து 20 நாட்களுக்கு பின்னர் தான் பதில் வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *