₹ 1.99 லட்சத்தில் ஹீரோ மேவ்ரிக் விற்பனைக்கு வெளியானது
ஹீரோ நிறுவன முதல் 350-500cc பிரிவில் மோட்டார்சைக்கிள் மேவ்ரிக் 440 அறிமுக சலுகையாக விற்பனைக்கு ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் மிக கடுமையான சவாலினை நடுத்தர மோட்டார்சைக்கிளின் வலுவான போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்றது.
ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் மிக சிறப்பான டார்க் வெளிப்படுத்துகின்றது. போட்டியாளர்களாக ஹார்லி-டேவிட்சன் X440, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ட்ரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஜாவா 350 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
மேவ்ரிக் பைக்கில் உள்ள என்ஜின் ஏற்கனவே சந்தையில் உள்ள ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் உள்ள அதே என்ஜின் ஆகும். 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 6000 RPM-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 36Nm டார்க்கை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.
ஹீரோ Mavrick Price list
Mavrick Base ₹ 1,99,000
Mavrick Base ₹ 2,14,000
Mavrick Top ₹ 2,24,000
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)
மெக்கானிக்கல் அம்சங்கள்: இந்த பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளதுழ 110/70 – 17 மற்றும் பின்புறத்தில் 150/60 – 17 டயர் கொண்டு ஸ்போக் மற்றும் அலாய் வீல் என இருவிதமாக உள்ளது.
பிரேக்கிங் பாதுகாப்பு : முன்புறம் டிஸ்க் பிரேக் 320mm மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டர்: நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளேவை பெறுகின்ற இந்த ரோட்ஸ்டெர் மேவ்ரிக் 440 மாடலில் ஹீரோ கனெக்ட் வசதி மூலம் ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்ஃபோன் ஒருங்கிணைத்தால் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் என பலவற்றை வழங்குகின்றது.
இன்று முதல் புக்கிங் துவங்கப்பட்டுள்ளதால் ஹீரோ மேவ்ரிக் அடுத்த சில வாரங்களுக்கு பிறகு டெலிவரி துவங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படுகின்றது.
உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், ஹீரோ மோட்டோகார்ப், புதிய Mavrick Club சலுகையை அறிமுகப்படுத்துகிறது. வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் மேவ்ரிக் 440 மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.10,000 மதிப்புள்ள தனிப்பயனாக்கப்பட்ட Mavrick Kit of Accessories & Merchandise கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.