நைட் பிரஷ் பண்ணமாட்டீங்களா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருக்காம்.. உஷார்..
Heart Attack: வாய் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் சாப்பிடும் உணவுகள் வாயின் வழியாகத் தான் உடலினுள் செல்கின்றன.
எனவே வாயில் நிறைய அழக்குகள் சேரவும், தொற்றுகள் ஏற்படுவதற்குமான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன. வாயின் ஆரோக்கியத்தை புறக்கணித்தால் அது பற்கள் மற்றும் ஈறுகளை மோசமாக பாதிப்பதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
சமீபத்திய ஆய்வுகளின் படி, தினமும் இரவு நேரத்தில் பற்களை துலக்காதவர்களுக்கு உயிரைப் பறிக்கக்கூடிய மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் தினமும் இரண்டு முறை பற்களை துலக்காதவர்களுக்கு, தினமும் இருமுறை பற்களை துலக்குபவர்களை விட மாரடைப்பால் மரணம் ஏற்படக்கூடிய அபாயம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.