தேதி எல்லாம் இல்ல! சிவகார்த்திகேயன் படத்தை உதறி தள்ளிய மிருணாள் தாக்கூர்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் மிருணாள் தாக்கூர் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் சிம்புவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானவுடன் தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
அவர்களுக்காகவே தற்போது அதிர்ச்சியான தகவல் தான் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்உருவாகவுள்ள தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணாள் தாக்கூரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாம்.
பிறகு கதையை எல்லாம் கேட்டுவிட்டு மிருணாள் தாக்கூருக்கும் அந்த கதை பிடித்துவிட்டதாம். ஆனால், தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஏனென்றால், அவர் அடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். எனவே, தேதி பிரச்சனை காரணமாக படத்தில் நடிக்க முடியாது என்று படக்குழுவிடம் பேசி புரிய வைத்து இருக்கிறாராம்.