கதை ஓட்டத்தில் மாற்றம்… அர்ச்சனா வெளியேறிய காரணம் இதுதானா? மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்
ஆந்திராவில் பிறந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் தான் அர்ச்சனா. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான வீடு படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றிருந்த இவர், சத்யராஜூடன் இணைந்து நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை வென்றிருந்தார்.
கடைசியாக தமிழில் அழியாக கோலங்கள் என்ற படத்தில் நடித்த அர்ச்சனா சின்னத்திரையில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. தேசிய விருது பெற்ற நடிகையின் சின்னத்திரை அறிமுகம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டிருந்தனர். சில நாட்களுக்கு பிறகு ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடிக்க உ்ளளதாக தகவல் வெளியானது.
அடுத்த சில நாட்களில் அந்த சீரியலின் ப்ரமோவும் வெளியானது. இதில் மீனாட்சி மெஸ் நடத்தும் அர்ச்சனா 3 மகள்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அர்ச்சனா இருக்கிறார் என்பதற்காக சீரியலும் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில மாதங்களில் அர்ச்சனா மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது.
அடுத்த சில நாட்களில் அர்ச்சனா தான் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்பிறகு மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சியாக நடிகை ஸ்ரீரஞ்சனி நடித்து வருகிறார். இதனிடையே தான் விலகியது குறித்து விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள அர்ச்சனா, மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் தெலுங்கு பதிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தெலுங்கில் அந்த சீரியல் வெற்றி பெற்றதால், தமிழில் ரீமேக் செய்ய என்னை கேட்டார்கள். அதில் அம்மா கேரக்டர் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். சில மாதங்கள் ஷூட்டிங் நன்றாக போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு கதையில் சில மாற்றங்களை செய்தார்கள். அது எனக்கு பிடிக்காததால் உடனடியாக சீரியலில் இருந்து வெளியேறிவிட்டேன்.
எனக்கு பதிலாக வேறு நடிகையை கமிட் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லவிட்டு தான் சென்றேன் என் கூறியுள்ளார். ஆனால் சீரியல் குழுவினரிடம் விசாரித்தபோது, அர்ச்சனா ஆரம்பத்தில் இருந்தே சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், இதனால் தயாரிப்பு தரப்புக்கும் அர்ச்சனாவுக்கு இடையே மன வருத்தம் இருந்ததாக கூறியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.