Vijay – விஜய்க்கு அதுதான் ஆசை.. ஆனால் ரசிகர்களுக்காக செய்யவில்லை.. ட்ரெண்டாகும் இயக்குநரின் பேட்டி
சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கும் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார்.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது.
இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.