அமெரிக்க டிவி ஷோவில் ஒளித்த விஜய்யின் “நான் ரெடி” பாடல்-வைரலாகும் வீடியோ!
இந்த படத்தில் “நான் ரெடி” பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடலுக்கு அமெரிக்காவில் நடந்த ஒரு டிவி ஷாேவில் சிலர் நடனமாடியிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ்இயக்கத்தில், விஜய் ஹீரோவாக நடித்திருந்த படம், லியாே. இந்த படத்தில் த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும், ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரேவற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த “நான் ரெடிதான் வரவா” பாடலும் படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஹிட் அடித்தது.
‘நான் ரெடி’ பாடல்..
லியோ படத்தில் இரண்டாம் பாதிக்கு மேல் வரும் பாடல், “நான் ரெடிதான் வரவா..”. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். இவருடன் சேர்ந்து அசல் கோளார் பாடியிருப்பார். இப்பாடலுக்கு அனிருத் அமைத்திருந்த இசை, பலரை ஆட வைத்தது. இப்பாடலில் இடம் பெற்றிருந்த சில வரிகளும், வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு விஜய் போஸ் கொடுப்பது போல இருந்த புகைப்படங்களும் சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, அந்த வரிகள் இடம் பெற்றிருந்த இடங்களில் ‘டவுன் டவுன்’ இசை கொடுக்கப்பட்டது. வீடியோ பாடலில் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த மாற்றம் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த பாடல் அமெரிக்கா வரை தற்போது சென்றுள்ளது.