ஆன்மிகக் கதை: ‘தர்மம் தலை காக்கும்’ எப்படித் தெரியுமா?
ஒரு கிராமத்தில் இரக்க குணம் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தனது வீட்டுச் சுவர் மீது, ‘யாராவது பசியோடு வந்தால் சாப்பிடட்டும்’ என்று இரண்டு இட்லிகளை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தப் பெண்மணி நினைத்தபடியே தினமும் அந்த வழியே வரும் கூன் விழுந்த முதியவர் ஒருவர் அந்த இட்லிகளை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்த முதியவர் இட்லிகளை எடுத்துச் செல்லும்போது, தினமும் எதையோ முனகியபடியே சொல்லிக்கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இட்லி வைக்கும் அந்தப் பெண்மணிக்கு அந்த முதியவர் என்ன முனகுகிறார் என்பதை கேட்க வேண்டும் என்று தோன்றியது. அதன்படி அன்று சுவர் அருகே மறைந்து நின்று முதியவர் என்ன முனகுகிறார் என்பதைக் கேட்டாள்.
‘நீ செஞ்ச பாவம் உன்கிட்டயே இருக்கும்… நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்’ என்பதுதான் அந்த முதியவரின் தினசரி முனகல் வார்த்தைகள். இதைக் கேட்ட அந்தப் பெண்மணிக்கு அந்த முதியவர் மீது கோபம். காரணம், ‘தினமும் இட்லி வைக்கும் மவராசி நல்லா இருக்கணும்’ என அந்த முதியவர் கூறுவார் என்று அப்பெண்மணி நினைத்திருந்தாள்.
அந்த முதியவரின் மீது பயங்கர கோபத்தில் இருந்த அந்தப் பெண்மணி மறுநாள் தான் வைத்த இட்லியில் கொஞ்சம் விஷத்தையும் சேர்த்து வைத்து அந்த முதியவர் சாகட்டும் என்று நினைத்தாள். சற்று நேரத்தில் மனம் மாறி, ‘இதற்காக ஒரு உயிரை கொல்ல வேண்டுமா’ என நினைத்து, அந்த விஷ இட்லியை எடுத்து சாக்கடையில் எறிந்துவிட்டு, வழக்கமாக வைக்கும் நல்ல இட்லியை வைத்துவிட்டுச் சென்றாள். வழக்கம்போல், முதியவரும் அந்த இட்லிகளை எடுத்துக்கொண்டு தான் தினமும் கூறும் வாசகத்தை சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.