1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தாஜ்மஹால்…. ராஜேந்திர சோழன், பரவை நங்கை காதலிக்காக கட்டிய கோவில்!

காதலர் தினத்தில் சிறந்த காதலர்களின் வரிசையிலும் காதல் சின்னமாகவும் இன்றளவும் தாஜ்மஹால் தான் போற்றி கொண்டாடப்படுகிறது.

தாஜ்மஹாலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. சோழர்களின் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன்.

இவர் கங்கை வரை சென்று வெற்றி கொண்டு கங்கை கொண்ட சோழபுரம் நகரையும், கோவிலையும் நிர்மாணித்தான். தந்தையின் புகழைக் காட்டிலும் தமக்கு வேண்டாம் என்று எண்ணியே அதனை சிறிதாக கட்டியதாக இன்றுவரை பேசப்படுகிறது. அந்த ராஜேந்திர சோழன் தனது காதலி பரவை நங்கைக்காக திருவாரூரில் கட்டிய கோவில் தான் காதல் சின்னம்.

ராஜேந்திர சோழன், கி.பி. 1012-ஆம் ஆண்டு முதல் 1044-ஆம் ஆண்டு வரை மன்னராக இருந்தவர். இவர் கடாரத்தை வென்றவர். இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த ஆடல் அழகிக்கும் தாங்கொணா காதால் இருந்தது பலரும் அறியாதது. சோழ சாம்ராஜ்யத்தை கடல் கடந்து பரவிடச் செய்த மிகப்பெரிய மாவீரன் ராஜேந்திர சோழனின் காதலி தான் பரவை நங்கையார் .

“முதலாம் ராஜேந்திரன் கங்கையையும் கடாரத்தையும் வென்று பல வெற்றிகளை ருசித்தவன். இவனது உள்ளத்தை கொள்ளை கொண்ட காதலி திருவாரூரை சேர்ந்த ஆடல் அழகி பரவை நங்கை. இவருக்கு கிடைத்த சிறப்பு ராஜேந்திர சோழனின் பட்டத்தரசிக்கு கூட கிடைக்கவில்லை என்கின்றன வரலாற்று சான்றுகள். “ராஜேந்திர சோழனிடம் அவனது காதலி பரவை நங்கை வைத்த கோரிக்கைக்காக ஒரு செங்கல் கோவில் கற்கோயிலாக மாற்றப்பட்டது. அந்த கோவில் திருவாரூர் தியாகேசர் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *