காதலரை திருமணம் செய்து கொண்டேனா? ஸ்ருதிஹாசன் கொடுத்த விளக்கம்
நடிகை ஸ்ருதிஹாசனின் கணவர் சாந்தனு இவரும் திருமணம் செய்துகொண்டனர் என்று இணையத்தில் வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து, விஜய் அஜித், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து சில வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், தெலுங்கு பக்கம் சென்ற ஸ்ருதிஹாசன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்தார். தற்போது அவரது கைவசம் தமிழில் படங்கள் இல்லாத நிலையில, தெலுங்கு மற்றும் மியூசிக் ஆல்பங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்த சாலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. இதனிடையே ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் மும்பையில் ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இது குறித்து சமீபத்தில் ஒருவர் சமூகவலைதளத்தில் நடிகை ஸ்ருதி சாந்தனுவை திருமணம் செய்துகொண்டதாக கூறியிருந்தார்.
இந்த தகவல் வேகமாக இணையத்தில் பரவிய நிலையில், தற்போது விளக்கம் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், எனக்கு திருமணம் ஆகவில்லை. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக சொல்லும் நான் இந்த திருமணத்தை பற்றி ஏன் மறைக்க வேண்டும்? என்னை பற்றி தெரியாதவர்கள் அமைதியாக இருப்பது நல்லது என்று கூறியுள்ளார். சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் மற்றும் டெல்லியில் ஒரு இல்லஸ்ட்ரேட்டராக உள்ளார்.
இதனிடையே சமீபத்தில் எதை பற்றியும் என்னிடம் கேளுங்கள் என்று, நடிகை ஸ்ருதிஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். ஸ்ருதிக்கு திருமணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், தான் திருமணம் செய்து கொள்வதில் எப்படி பயப்படுகிறேன் என்று சமீபத்தில் அவர் மனம் திறந்து பேசினார். ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “திருமணம் என்ற வார்த்தை என்னை மிகவும் பயமுறுத்துகிறது. நான் அதைப் பற்றி சிந்திக்க விரும்பவில்லை என்று நிறைய இருக்கிறது. நான் அவருடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், அவருடன் இணைந்து நல்ல வேலைகளைச் செய்து, ஒன்றாக நேரம் செலவிடுகிறேன். பெரும்பாலான திருமணங்களை விட இது சிறந்ததல்லவா? என்று கூறியுள்ளார்.
பிரபாஸுடன் ஸ்ருதி நடித்துள்ள சாலார் படம் திரையரங்குகளில் ஓடி நல்ல வசூல் செய்து வருகிறது. அவர் அடுத்ததாக தி ஐ என்ற ஆங்கிலப் படத்திலும், பான்-இந்தியா படமான டகோயிட்விலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.