ரசிகர்களே! உங்களுக்கு நான் சத்தியம் செய்கிறேன்.. டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. ஜெய்ஷா உறுதி

ஐசிசி உலக கோப்பையை இந்தியா வென்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு தான் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது. அதன் பிறகு பல்வேறு ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறுகிறது.

இதில் இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலிக்கு இதுதான் கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ரசிகர்களுக்கு ஒரு சத்தியத்தை செய்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.

அந்த போட்டியை நான் நேரில் கண்டேன். பத்து போட்டிகளில் தொடர்ந்து நாம் வெற்றி பெற்றும், நம்மால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை. எனினும் ரசிகர்களின் மனதை இந்தியா வென்றது. நான் ரசிகர்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறேன். நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு பார்பிடாஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நாம் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வெல்வோம்.

ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் நாம் கோப்பையை கைப்பற்றுவோம். இந்திய அணியின் தேசிய கொடியை நாம் ஏற்றுவோம் என்று ஜெயிஷா கூறியுள்ளார். டி20 உலக கோப்பையில் யார் கேப்டனாக இருக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா தான் டி20 அணியின் கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாக இருந்தார்.

ஆனால் தற்போது ஜெய்ஷா, ரோகித் சர்மா தான் டி20 அணியின் கேப்டனாக இருக்கப் போகிறார் என்பதையும் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஐபிஎல் சேர்மன் அருண் துமால், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், அணில் கும்ப்ளே உள்ளிட்டோர்கள் இருந்தனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *