துபாய்: புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவாகும் தெரியுமா..?

கழுத்து சுளுக்கும் அளவுக்கு அண்ணாந்து பார்த்து மலைக்க வைக்கும் உயரத்தில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடம் அமைந்துள்ளது. மாடர்ன் இன்ஜினியரிங் டெக்னாலஜியின் உச்சகட்ட படைப்பு இது.

துபாயின் மத்தியில் அமைந்திருக்கும் புர்ஜ் கலீஃபாவுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுப்பயணிகள் வந்து ரசிக்கின்றனர்.

இந்தக் கட்டடத்தில் நிறைய வர்த்தக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு பல்வேறு தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

ஆனால் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வது எல்லாருக்கும் கட்டுப்படியாகாது. இந்த கட்டிடத்தில் பிறந்தநாள் வாழ்த்து முதல் திரைப்படங்கள், அரசு திட்டங்கள், முக்கிய நிகழ்வு என அனைத்தையும் விளம்பரப்படுத்தப்படுகிறது. பணம் இருந்தால் மட்டும் போதும்.

உங்களது புராடக்ட்டை அங்கு விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரிந்தால் திகைத்து விடுவீர்கள். அந்தளவுக்கு விளம்பரக் கட்டணம் காஸ்ட்லியாக இருக்கும். உலகின் மிக உயர்ந்த கட்டடம் அல்லவா!

புர்ஜ் கலீஃபா கட்டடம் முழுவதும் இருக்கும் வெளிப்புற கண்ணாடி சுவரில் செய்யப்படும் விளம்பரத்திற்கு கட்டணம் உள்ளது. கட்டடத்தின் உள்ளே வைக்கப்படும் விளம்பரத்தின் அளவு, இடம், நேரத்தைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புர்ஜ் கலீஃபா கட்டடத்திற்குள் கீழ் தளங்களில் சிறிய விளம்பரத்துக்கு 25,000 டாலரிலிருந்து மேல் தளங்களில் பெரிய விளம்பரம் வைப்பதற்கு 1.3 மில்லியன் டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் கேட்பதற்கு மிகவும் அதிகமாக உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் விளம்பர இடத்தின் இடம் மற்றும் கௌரவம் இந்தச் செலவுகளை நியாயப்படுத்துகிறது.

நீங்கள் துபாய் நீரூற்றுகளுக்குச் சென்றிருந்தால், உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் நிகழ்ச்சியைப் படமாக்க துபாய்க்கு வருவதைப் பார்க்கலாம்.

புர்ஜ் கலீஃபா எப்போதும் ஒரு கவனத்தை ஈர்க்கும் இடமாக இருக்கும் காரணத்தால் மக்களின் பார்வை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக, மூன்று மாத விளம்பரத்துக்கு சுமார் $750,000 செலவாகும், ஆனால் இது உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்தவும் பரந்த பார்வையாளர்களை அடையவும் போதுமான நேரத்தை வழங்குகிறது.

புர்ஜ் கலீஃபாவில் மற்றொரு செலவு குறைந்த விளம்பர முறை என்றால் நாம் யூடியூப், டிவிட்டரில் பார்க்கப்படும் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் ஆகும். கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன்களைக் காட்ட ப்ரொஜெக்டர்களைப் பயன்படுத்தி வளம்பரம் செய்யும் முறை.

இத்தகைய ப்ரொஜெக்ஷன் மேப்பிங்குக்கான ஆரம்ப கட்டணம் சுமார் $100,000 ஆகும், ஆனால் இந்த செலவு காட்சிகளின் சிக்கலான தன்மை மற்றும் நீளத்தின் அடிப்படையில் மாறுபடும்.

புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வது ஒரு செலவு மிகுந்த விஷயமாகத் தோன்றலாம். ஆனால் பரந்த மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை அடைவதன் பலன்கள் அதை ஒரு பயனுள்ள முதலீடாக மாற்றுகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *