அயலான் படத்திற்கு சம்பளம் பெறவில்லை… முக்கியமா இவருக்கு நன்றி : சிவகார்த்திகேயன் பேச்சு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில், கடைசியான வெளியான மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அவரின் நடிப்பில் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து வரும் அயலான் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அயலான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த ஆடியே வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘அயலான்’ படத்தில் புகைபிடித்தல், குடிப்பழக்கம், கவர்ச்சி, வன்முறை, ரத்தம் சிந்தும் காட்சிகள் எதுவும் இருக்காது, படத்தை சாஃப்டாக உருவாக்கியதற்காக படத்தின் எடிட்டர் ரூபனுக்கு பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்..

அதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், பிரபல இசையமைப்பாளருடன் பணிபுரிந்ததற்கும் தனது சிறப்பு நன்றிகளைப் தெரிவித்துக்கொண்ட சிவகார்த்திகேயன்,’அயலான்’ படத்தில் நகைச்சுவையான வேற்றுகிரகவாசி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததற்காக சித்தார்த்துக்கு நன்றி. இந்த படத்தில் அவர், டப்பிங் கலைஞராக பணிபுரிந்ததற்காக அவர் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் தன்னை நேசிக்கும் மக்களுக்காக தனது பாதையை தொடர்ந்து பின்பற்றுவேன் என்று கூறியுள்ள சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தி தனக்கு மிகப்பெரிய தார்மீக ஆதரவாக இருக்கிறார் அதனால் அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

‘அயலான்’ இயக்குனர் ரவிக்குமார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது இன்னும் உயர்ந்த நிலையை அடைவார் என்று என்று கூறியுள்ளார்.
‘அயலான்’ படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளம் எதுவும் வாங்கவில்லை, ஏனெனில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் இந்த சைன்ஸ்பிக்ஷன் படத்தின், மூலம் சம்பாதிப்பதை விட படத்திற்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று விரும்பியதாக கூறியுள்ளார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது மகன் குகன் தாஸுடன் இணைந்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை வாழ்த்தினார்.

மேலும் தந்தை-மகன் இருவரும் நிகழ்வை இனிமையானதாக மாற்றிய சிவகார்த்திகேயன், பொங்கலுக்கு ‘அயலான்’ படத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘லால் சலாம்’ படங்கள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ‘எஸ்கே 21’ படத்திலும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என்று உறுதியளித்த சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸுடனான தனது படம் 2024 ஜனவரியில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *