துரோகம் செய்ததாக நினைத்து காதலரின் ஆணுறுப்பை அறுத்த பெண்!
பெரு நாட்டில் செவிலியர் ஒருவர் தனது காதலரின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரோகம்
தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருபவர்கள் Marleni Rimarachin Colunche (39) மற்றும் Ivan Cespedes (39).
காதலர்களான இவர்கள் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. தனது காதலர் துரோகம் செய்வதாக Marleni நினைத்துள்ளார்.
இந்த நிலையில் Ivan மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் தூங்க சென்றுள்ளனர்.
Marleni தனது காதலர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது ஆணுறுப்பை சமையலறை கத்தியால் அறுத்துள்ளார். இதில் Ivan வலியால் அலறித் துடித்துள்ளார்.
விசாரணை
அதனைத் தொடர்ந்து Marleni அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் Ivan அவராகவே காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.
இந்த விடயம் பொலிஸாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கறிஞர் விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தம்பதிக்கு மூன்று மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக Marleni பிணையில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.