லண்டனில் தரையிறங்கிய விமானம்… உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய TUI விமானத்தில் இருந்து உடல் உறைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில்
குறித்த நபரின் அடையாளம் இதுவரை மர்மமாகவே உள்ளதாக தெரிவித்துள்ள விசாரணை அதிகாரிகள், சம்பவத்தின் போது அந்த நபர் மெல்லிய ஜாகிங் உடை மற்றும் செருப்பு அணிந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2022 டிசம்பர் 7ம் திகதி லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய TUI விமானத்தின் அடிப்பகுதியில் ஒளிந்திருந்த நிலையில் அந்த நபரின் சடலம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர்.

அவரது அடையாளம் இதுவரை அதிகாரிகளால் உறுதி செய்யப்படவில்லை. மேலும், கடும் குளிர் காரணமாக உடல் உறைந்து அவர் மரணமடைந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேட்விக் விமான நிலையத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவே அதிகாரிகள் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவுக்கான தொலைதூர விமான பயணத்தின் போது, வானிலை -60C என சரிவடையும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியில்
காம்பியா தலைநகரான Banjul-ல் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு விமனாம் புறப்படும் முன்னர் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.

விமானம் இரவு நேரம் புறப்பட்டுள்ளது. அந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அடையாளம் காணும் பொருட்டு சசெக்ஸ் காவல்துறை சில புகைப்படங்களை வெளியிட்டது. இருப்பினும் அவர் அடையாளம் காணப்படவில்லை.

அந்த நபர் எவ்வாறு விமானத்தின் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் நுழைந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், தொலைதூர பயணம் என்பதால், கடும் குளிர் காரணமாக அவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் மேலதிக தகவல் வெளியாகும் என்றால், மறுபடியும் விசாரணை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *