Super Bowl அணிவகுப்பு… துப்பாக்கிச் சூடுக்கு இலக்கான பலர்
அமெரிக்காவின் கன்சாஸ் நகர NFL Super Bowl அணிவகுப்பில் திடீரென்று துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக 10 பேர்கள்
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில் துப்பாக்கியுடன் இருவர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அந்த நபர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி குண்டுக்கு இலக்கானவர்கள் தொடர்பில் உறுதியான எண்ணிக்கை வெளியாகவில்லை என்றும், முதற்கட்டமாக 10 பேர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பொலிஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, கன்சாஸ் நகர பொலிசார் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவலில், துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும், பொதுமக்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேடும் என்றும், இருவர் கைதாகியுள்ளதாகவும், மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.