திவாலான அனில் அம்பானியின் நிறுவனத்தை கையகப்படுத்த துடிக்கும் சகோதரர்கள்., யார் அவர்கள்?
ரூ. 4000 கோடி கண்டான் வாங்கியாவது, திவாலான அனில் அம்பானியின் நிறுவனத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என நான்கு சகோதரர்கள் கொண்ட குழு முயற்சித்துவருகிறது.
தொழிலதிபர் திருபாய் அம்பானியின் இளைய மகன் அனில் அம்பானி பல வருடங்களாக நிதி நெருக்கடியில் உள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவரே தனது நிகர மதிப்பு பூஜ்யம் என்று கூறினார். கோடிக்கணக்கில் கடனில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானி தனது பல நிறுவனங்களை விற்றுவிட்டார்.
தற்போது சிக்கலில் இருக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்தை வாங்க இந்த தொழிலதிபர் சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்திய வணிகத் துறையில் மிகவும் பிரபலமான ஹிந்துஜா பிரதர்ஸ், கடனில் மூழ்கியிருந்த அனில் அம்பானி நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது.
Hinduja Groups- 4 சகோதரர்கள்
டிரக்குகள், லூப்ரிகண்டுகள், வங்கிகள், கேபிள் டெலிவிஷன் போன்ற பல வகையான வணிகங்களில் ஹிந்துஜா குழுமம் பெயர் பெற்றுள்ளது.
ஹிந்துஜா சகோதரர்கள் இந்திய வணிகத் துறையில் பெரும் முதலீடுகளால் மிகவும் பிரபலமாக உள்ளனர்.
ஹிந்துஜா சகோதரர்களில் நான்கு சகோதரர்களும் அடங்குவர். ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அசோக். நான்கு ஹிந்துஜா சகோதரர்களும் சேர்ந்து 1914-ஆம் ஆண்டு அவர்களின் தந்தை பரமானந்த் திப்சந்த் ஹிந்துஜாவால் நிறுவப்பட்ட பிரம்மாண்டமான குழுமத்திற்கு தலைமை தாங்கினர்.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்த கையகப்படுத்த ரூ. 9650 கோடி டீல்
Forbes பத்திரிக்கையின் படி, ஹிந்துஜா குடும்பத்தின் மதிப்பு 166,110 கோடி ரூபாய்.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை கையகப்படுத்த ஹிந்துஜா குழுமம் ரூ. 9650 கோடியை தருவதாக கூறியுள்ளது.
ரூ. 4000 கோடி கடன் வாங்க பேச்சுவார்த்தை
ரிலையன்ஸ் கேபிட்டலை குழுமத்தின் கையகப்படுத்துதல் தேவையான நீதிமன்ற மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் நிலுவையில் இருந்தாலும், அனில் அம்பானியின் நிறுவனத்தை வாங்குவதற்காக ஹிந்துஜா குழுமம் ரூ.4,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, ஹிந்துஜா குழுமம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிட்டலை திவால் குறியீட்டின் கீழ் வாங்குவதற்கு ரூ. 4000 கோடி கடன் வாங்க வங்கி அல்லாத நிதி நிறுவனமான 360 One Prime-உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஹிந்துஜா சகோதரர்கள்- யார் தலைவர்?
கோபிசந்த் ஹிந்துஜா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். மே 2023-இல் அவரது மூத்த சகோதரர் சந்த் ஹிந்துஜாவின் மரணத்திற்குப் பிறகு அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.
1979 வரை ஹிந்துஜா குழுமம் ஈரானில் தலைமையகம் இருந்தது. சந்த் ஹிந்துஜாவும் அவரது சகோதரர் கோபிசந்தும் 1979 இல் லண்டனுக்கு ஏற்றுமதி தொழிலை மேம்படுத்துவதற்காக குடிபெயர்ந்தனர்.
பிரகாஷ் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் குழுவின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறார், அதே நேரத்தில் இளைய சகோதரர் அசோக் இந்திய வணிகத்தை கவனிக்கிறார்.
ஹிந்துஜா குழுமத்திற்கு இந்தியா உட்பட உலகின் பல முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. 2017-ஆம் ஆண்டில், ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஹிந்துஜா பிரித்தனையாவைன் பணக்காரர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.