ரூ 50 கோடிக்கு வீடு… அணியும் ஷூ மட்டும் ரூ 20 லட்சம்… சொத்து மதிப்பு ரூ 600 கோடி: யாரிந்த பிரபலம்

தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என கவனம் ஈர்த்து வருபவர் Shark Tank India புகழ் Namita Thapar.

சொத்து மதிப்பு ரூ 600 கோடி
தொழில் ரீதியாக வெற்றிகளை அவர் குவித்து வருவதுடன், சொகுசு வீட்டுக்கு சொந்தக்காரர், விலை உயர்ந்த கார்கள் மற்றும் பல கோடிகள் சொத்து மதிப்புக்கு சொந்தக்காரர் எனவும் Namita Thapar அறியப்படுகிறார்.

Emcure Pharmaceuticals என்ற நிறுவனத்தின் தலைவரான Namita Thapar தொடர்ந்து 3வது சீசனாக Shark Tank India என்ற தொலைக்காட்சி தொடரில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.

ஊடகங்களில் வெளியான தரவுகளின் அடிப்படையில் நமிதா தாபரின் சொத்து மதிப்பு ரூ 600 கோடி என்றே கூறப்படுகிறது. Emcure Pharmaceuticals என்ற நிறுவனத்தில் இருந்தே பெருந்தொகை ஆதாயம் பெறுகிறார்.

MBA பட்டதாரியான நமிதா தாபர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பின்னர், Guidant Corporation என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பிய அவர், தந்தை சதீஷ் மேத்தா உருவாக்கிய Emcure Pharmaceuticals என்ற நிறுவனத்தில் தலைமை நிதி நிர்வாக அதிகாரியாக இணைந்தார்.

ஒரு எபிசோடுக்கு ரூ 8 லட்சம்
தொடர்ந்து மிக விரைவில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். Emcure நிறுவனத்தில் முதன்மை பொறுப்புகளில் செயல்பட்டு வந்தாலும், Incredible Ventures Ltd என்ற நிறுவனத்தின் தலைவராகவும், Shark Tank India என்ற தொலைக்காட்சி தொடரின் நடுவர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார்.

Shark Tank India என்ற நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ 8 லட்சம் வசூலித்து வருகிறார். இவர் சொந்தமாக Bummer, Altor, InACan மற்றும் Wakao Foods ஆகிய நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

நமிதா தாபரின் வீடு மட்டும் ரூ 50 கோடி என்றே கூறப்படுகிறது. Shark Tank India நிகழ்ச்சியின் போது ஒருமுறை நமிதா தாபர் அணிந்திருந்த ஷூவின் விலை ரூ 20 லட்சம் என்றே கூறப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *