மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய 7 அறிகுறிகள்- மருத்துவர் கூறும் விளக்கம்
இதயத்தின் பகுதிகளுக்குக் இரத்தஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற் பயிற்சி இல்லாத காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருகின்றன.
மாரடைப்பு ஏற்படும் முன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.
அந்த அறிகுறிகளை உணர்ந்து முன்கூட்டியே போதுமான மருத்துவ வசதி எடுத்துக்கொண்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.
அந்தவகையில், மருத்துவர் கார்த்திகேயன் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய 7 அறிகுறிகளை பகிர்ந்துள்ளார்.
மருத்துவர் கூறும் 7 அறிகுறிகள்
மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளாக பொறுக்கமுடியாத மார்பு வலி, மார்பில் ஒரு இறுக்கம் போன்றவை ஏற்படும்.
மாரடைப்பு அறிகுறிகளாக கை, சுண்டு விரல், வயிறு, முதுகு, தாடை போன்ற பகுதிகளுக்கும் மாரடைப்பு வலி பரவும்.
மேலும் உடம்பு முழுக்க குளிர்ந்த வேர்வை சுரக்கும்.
மாரடைப்புக்கான பிற அறிகுறிகளான வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும்.
அதிகளவில் மூச்சுத் திணறல் ஏற்படும்.
அதிகளவு இதயம் படபடப்பு மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.
தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படும். இவை பெரும்பாலும் மாரடைப்பைக் குறிக்கும்.